கூத்தப்பார் ஊரின் பெயர் விளக்கம்
கூத்தைப்பார் பெயர் விளக்கம் மத்தியார்சுனபுரம் :- ( அர்ச்சுனம் + மத்தி + புரம் ) அர்ச்சுனம் --> மருத மரம் . மருத மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் உண்டாக்கப்பட்ட நகரம் எனப் பொருள் . பவள வனம் :- பவளம் போல் சிவந்த திருமேனயுடைய சிவபெருமானார் கிரகபதியின் தபதிற்கிணங்கி சிவந்த அக்கினித் தம்பமாகத் தோன்றி லிங்கமூர்த்தியாய் திருக்கோயில் கொண்டிருக்கிற நகரமெனப் பொருள் . வனம் - அழகு , குடியிருப்பு , வீடு .